ராகம் – பிலஹரி தாளம் – ஆதி
பல்லவி
பல்லவி
மெய்யமலைமேல் அமர்ந்தருளும் சத்யகிரி நாதனே!
உய்ய வந்த தாயாருடன் அருளும் மெய்யப்பனே!(மெய்ய)
அனுபல்லவி
பையரவம் ஆதிசேடனின் ஆணவம் அழித்தவனே.
ஹயக்ரீவனாய்த் தோன்றி சத்வகுணம் அளித்தவனே.(மெய்ய)
சரணம்
வையமெல்லாம் உய்ந்திடவே சங்கேந்தி நிற்பவனே!.
மெய்யன்புடன் தொழுவோரின் இருவினையைக் களைபவனே!.
தயிரன்னம் அமுதகலசம் ஏந்தும் ததிவாமனனே!
மெய்ய மணவாளனே! வானவர்தம் தலையாளனே! (மெய்ய)