ராகம் – பாகேஸ்ரீ தாளம் – ஆதி
பல்லவி
உரகமெல்லணையானே! சௌம்யநாராயணனே!
திருமாமகள் விரும்பும் வைகுண்டநாதனே! (உரக)
அனுபல்லவி
திருமந்திரத் த்வயம் விளைந்த திருப்பதியில்,
அரவம் மேல் துயின்றமர்ந்து நின்று நடமாடியே. (உரக)
சரணம்
இரணியனை வதைத்திடவே தேவர் கூட்டம் கூடவே
கருந்தடல் முகில் வண்ணனனே நரசிம்மமாகினாய்.
புருஷோத்தமா! கேசவா! ஆயர்ப்பாடி கண்ணனே!
திருக்கோட்டியூர் அழகனே! என்னுள்ளம் புகுந்தவனே!. (உரக).