ராகம் – நாட்டைக்குறிஞ்சி தாளம் – ஆதி
பல்லவி
ஆயிரம் தோளுடன் ஆயிரம் முடி மின்னும் அனந்தனில் துயில்வோன் ஆளும்மலை
ஆயிரம் ஆறுகள் சுனைநீர்ப் பெருக்கும் ஆயிரம் பொழிலுடை மாலிருஞ்சோலை. (ஆயிரம்)
அனுபல்லவி
தூய்மையான அபரஞ்சித் தங்கத்தால் ஆன அழகிய மணவாளா!
கையில் வாள் சார்ங்கம் சங்கு சக்கரம் கதையுடையவனே! கள்ளழகா!(ஆயிரம்)
சரணம்
தெய்வமகளiர் ஆடும் நூபுர கங்கையாறும் சிலம்பாறுடனே இட்டசித்தி
பொய்கை யாவுமே நோய்தீர்க்கும், முற்பிறவி உணரும் சக்தி தரும்.
நெய்யுடைஅடிசில் நூறுதடாவில் ஏற்றவனே! முக்தி தருபவனே!.
வாயினால் பாடியே மனத்தினால் சிந்திப்போம். சுந்தரவல்லியின் மணவாளா!. (ஆயிரம்)