ராகம் – வாசஸ்பதி தாளம் – ஆதி
பல்லவி
இடதுகாலூன்றி வலது காலை விண் தூக்கியே
இடம் வலக்கை சங்கு சக்கரம் ஏந்திய திருவிக்கிரமனே! (இடது)
அனுபல்லவி
வடிவில் வாமனனாய் பிருகுமுனிக்குக் காட்சி தந்த
இடர் கடியும் பஞ்சகிருஷ்ண க்ஷேத்திரத்தில் அருள் புரியும் (இடது)
சரணம்
அடியவன் யானையைக் காத்த ஆராவமுதனே!
விடைகள் ஏழும் அடக்கி மருதம் சாய்த்த கண்ணனே!
முடிவேந்தர் பாரதப்போரில் தேரூர்ந்த சாரதியே!
சுடர்ச் சோதியே! முதலாழ்வார் மூவர்பாடிய தேவனே! (இடது)