ராகம் – சங்கராபரணம் தாளம் – மிஸ்ரசாபு
பல்லவி
தாமரைமலரும் சங்குசக்கரமும் நெற்றிக்கண்ணும் உடைவனே!
மாமுகில் வண்ணா! திருவுடை மார்பா! மூவராகிய ஒருவனே!(தாமரை)
அனுபல்லவி
ஹேமாம்புஜ வல்லியை மணந்த திருவஹீந்திரபுர வாசனே!
அமுதம் வழங்கும் ஒளஷதாசல தெய்வநாயகப் பெருமாளே! (தாமரை)
சரணம்
பாம்பணைசேவையில் மகிழ்ந்திடும் ஏழிசைநாதப் பெருமாளே!
பூமியில் சேஷதீர்த்தமும் கருடநதியும் பிணிக்கு மருந்தாமே
பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட இந்திரன் வணங்கிய தேவராஜனே!
மாமுனி தேசிகனின் ஞான மூர்த்தியே அருளும் யோக நரசிம்மனே! (தாமரை)