ராகம் – மோகனம் தாளம் – ஆதி
பல்லவி
பார்த்தன் பள்ளி நாதனே! நாங்கை தேவ தேவனே!
பார்த்தனுக்குச் சாரதியே! செங்கண்மாலே! (பார்த்தன்)
அனுபல்லவி
பார்த்தன் தேரிலே ஊர்ந்து கீதை சொன்ன நாயகனே!
சரமஸ்லோக விளக்கம் சொன்ன கார்முகில் வண்ணனே! (பார்த்தன்)
சரணம் 1
பிரம்மஹத்தி தோஷம் நீக்கி வருணனுக்கருள் செய்தாய்
அரக்கர் குலம் அழியவே குரக்கர் துணைபெற்றாய்.
இராவணனை வதம் செய்த கோலவில்லி ராமனே!
பாருண்டு உமிழ்ந்தவனே! தாமரையாள் கேள்வனே! (பார்த்தன்)
சரணம் 2
மருங்கு அசையக் காவிரியின் நடையே அழகு
அருச்சுனன் கத்திகீறி வந்த கங்கையும் அழகு.
கரண்ட மகுடம் பத்ரகுண்டலம் அசையும் தாயும் அழகு.
பெருமாளுடன் மூன்று தேவியர் சேவையும் அழகு. (பார்த்தன்)