
ராகம் – தர்பாரி கானடா தாளம் – ஆதி | (இரட்டைக்களை)
பல்லவி
அழகிய நம்பியுடன் சேர்ந்தருளும் திருவடி அழகிய நம்பி!
கழல்பணிந்தோர்க்கு அன்பேயுருவாய்க் காட்சி தருகின்ற நம்பி! (அழகிய)
அனுபல்லவி
செழுந்தவத்தோன் பிருகுமுனியும் அறிந்த சத்துவ குண மூர்த்தி!
அழகிய பாமபணையில அரிதுயிலும் புஜங்கசயன மூர்த்தி! (அழகிய)
சரணம்
சுழன்றோடும் காவிரி பல்குனி சாவித்திரி நதிகளும் கூடும்.
எழில்மிகு தக்ஷிணகயையெனும் பெயரே பெறுகின்ற புண்ணியக்ஷேத்திரம்.
ஆழிப்பிரானும் மழுவேந்தியவனும் சேர்ந்து பெருமை தரும் பாணபுரம்.
ஆழிநெடுமால் சுந்தரராஜனைச் சம்பந்தர் பாடிய அன்பில் திருத்தலம். (அழகிய)