ராகம் – கல்யாணவசந்தம் தாளம் – ஆதி
பல்லவி
திருவெள்ளக்குளத்துறை அண்ணன் பெருமாளே!
திருமலை வேங்கடேசனின் அண்ணனே ஸ்ரீநிவாசனே! (திருவெள்ள)
சரணம் -1
மரணமிலாப் பெருவாழ்வுதரும் சுவேதக்குளத்தினிலே,
நீராடினால் கொலைப் பாவமும் கிரகதோஷமும் நீங்கிடுதே.
வராகமாய்ப் பூமிகுடைந்தாய் வேதியர் மன்னிய நாங்கூரிலே
ஆராவமுதனாய் அருளும் துழாய் மார்பனே! (திருவெள்ள)
சரணம்-2
திருமங்கை மன்னன் குமுதவல்லியை மணந்த இடம் இதுவே.
குருவான மணவாள மாமுனிக்குக் காட்சி கொடுத்தவனே!.
திருமகள் நாச்சியார் பத்மாவதியின் கேள்வனே!.
திருநாங்கூர் கருடசேவையில் சேவைதரும் ஒளிவிளக்கே!. (திருவெள்ள)