ராகம் – ஹம்ஸானந்தி தாளம் – ஆதி
பல்லவி
திருக்காவளம்பாடியில் துவாரகை கிருஷ்ணனே!
இரு தேவியர் ருக்மணி சத்யபாமை கேள்வனே! (திருக்காவளம்பாடி)
அனுபல்லவி
பாரிஜாதா மலரெடுத்துப் பூசை செய்வேன் உன்னையே.
திருநாங்கூர் கருடசேவை தரிசனம் தரும் கண்ணனே! (திருக்காவளம்பாடி)
சரணம்
கருடசேவை தருவதற்கே பதினொரு உரு எடுத்தாய்.
அரனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளும் செய்தாய்.
ஒரு கையில் சாட்டையும் மறுகை பசுவின் மேலும்,
திருமுகம் எழிலுடனே காட்டும் ராஜகோபாலனே! (திருக்காவளம்பாடி)