ராகம் – கேதாரகௌள தாளம் -ஆதி
பல்லவி
திருமணிக்கூட நாதா! கஞ்சி வரத ராஜா!
அருள் புரியும் திருமகள் இந்திரா மணவாளா! (திருமணிக்கூட)
அனுபல்லவி
ஒரு யானை குரல் கேட்டு முதலைவாய் மீட்டவனே!
ஒரு யானை வதம்செய்த குவலயா பீடக் கண்ணனே! (திருமணிக்கூட)
சரணம்
ஒருவிரலில் குன்றம் ஏந்திக் குவலயம் காத்தவனே!
வரும் வினையோ முன்வினையோ தீராவினை தீர்ப்பவனே!
உருவம் இழந்த நிலவின் சாபமும் தீர்த்தவனே!
மருத்துவ மாமணியே! வரம்தரும் வள்ளலே! (திருமணிக்கூட)