ராகம் – நீலாம்பரி தாளம் – ஆதி (திஸ்ரம்)
பல்லவி
திருவரங்கத்து நாதனே! திருத்தெற்றியம்பலத்தில்
திருப்பள்ளி கொண்டவனே! செங்கண்மால் தாலேலோ. (திருவரங்கத்து)
அனுபல்லவி
மரக்காலில் தலை வலக்கை இடுப்பினிலே இடக்கை வைத்து
அரிதுயிலும் லஷ்மிரங்கா! செங்கமலவல்லி நாதனே! (திருவரங்கத்து)
சரணம் 1
பிரியாதான் இலக்குவன் விரிசடையோன் திருமகள்
விரும்பியபடி பலாசவனம் அசையாது உறங்குதியோ?
வராகமாய் நிலம் குடைந்து பூமகளை மீட்டு வந்து
இரண்யாட்சனை வென்றவனே! களைப்பினிலே உறங்குதியோ? (திருவரங்கத்து)
சரணம் 2
விரிதிரைக்கடல் துயின்றவனே! வேதவிமானம் கீழே
திருமகளும் பூமகளும் அருகிருக்க உறங்குதியே.
பரமசிவன் போலவே அம்பலத்தில் தாண்டவம்
பிராட்டிக்குக் காட்டியே உறங்குதியே தாலேலோ ((திருவரங்கத்து)