ராகம் – ரீதிகௌள தாளம் – ஆதி
பல்லவி
பேரருளாளனே! செம்பொன்செய்கோயில் தாமேதரனே! ஹேமரங்கனே!
அருளானவனே! பரமபதத்திலிருந்து வந்தவனே! வானவர்கோனே! . (பேரருளாளனே)
அனுபல்லவி
இராவணனை வென்ற இராமன் வணங்கிய பெருமாள் ஆனவனே!.
பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட சிவனும் அசுவமேத யாகம் செய்தானே. (பேரருளாளனே)
சரணம்
நாரணன் நாமம் எட்டெழுத்தும் உருகிச் சொல்ல வறுமை விலகிடுமே.
பொருளும் நலமும் வெற்றியும் கூடும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கிடுமே.
கருணைபொழியும் அல்லிமாமலர் பூமாதேவியின் நாயகனே!
கருடசேவையில் ஒளிரும் வேத விளக்கே! வாழி வாழியவே! (பேரருளாளனே)