ராகம் – லதாங்கி தாளம் – ஆதி
பல்லவி
உத்தமனே! ஓங்கி உலகளந்த உத்தமனே!
புருஷோத்தமனே! புருஷோத்தம நாயகியின் கேள்வனே! (உத்தமனே)
அனுபல்லவி
அயோத்தியில் துன்பங்களேற்று இராவணனை வென்ற இராமனே!.
சித்தத்தில் எளிமையாய் மாவலியை வென்ற வாமனனே! (உத்தமனே)
சரணம்
குமேதஸ் ஞானமும் வித்தையும் பெற்ற இடம் இதுவே.
குழந்தை உபமன்யுவுக்குப் பாற்கடலைக் கொணர்ந்தளித்து
அமுதென அருள் பொழியும் சஞ்சீவி விக்ரஹவிமானம் கீழ்
இனிதே மகிழ்ந்துறையும் வானவர்க்கு வானவனே! (உத்தமனே)