ராகம் – நவரசகன்னடா தாளம் – ஆதி
பல்லவி
வேதமுதல்வனே! முழுமுதற் கடவுளே!
ஏத்தி உனைப் பணிந்தேன் தெய்வ நாயகனே! (வேத)
அனுபல்லவி
சதுர்முகனும், இந்திரனும், இமையவர் முனிவரும்
கதிரவன் மதி கூடிய திருத்தேவனார் தொகையே! (வேத)
சரணம்
மதயானை கொம்பொசித்துக் கண்ணன் அமர்ந்த இடம்.
மாதவ நாயகி கடல் மகளை மணந்த இடம்.
பாதம் பணிந்தால் திருமணப் பேறளிக்கும் இடம்.
மாதவனே மண்ணித் தென் கரை மேல் உறையும் இடம் (வேத)