ராகம் – காபி தாளம் – ஆதி
பல்லவி
திருமாலே நீ விரும்பி அமர்ந்த இடம்!
அரிமேய விண்ணகரம் என்னும் தலம்! (திருமாலே)
அனுபல்லவி
திருமடந்தை மண்மடந்தை அருகில் அமர்ந்திருக்க
திருநடம் புரியும் குடம்ஆடும் கூத்தப் பெருமாளே (திருமாலே)
சரணம்
அரி உருவில் வந்து இரணியனை அழித்தவனே!.
ஓரடி ஈரடி மூன்றாய் மூவுலகும் அளந்தவனே!.
இராவணனின் ஒருபத்து தலையினையும் அறுத்தவனே!.
திருமகள் அமிருதகட வல்லியுடன் அருள்பவனே!. (திருமாலே)