ராகம் – ஷண்முகப்ரியா தாளம் – ஆதி(திஸ்ரம்)
பல்லவி
விண்ணிலிருக்கும் வைகுந்தம் மண்ணில் வந்ததே!
விண்ணவர் தொழும் பரமபதநாதன் புருஷோத்தமனே!(விண்ணில்)
அனுபல்லவி
அனந்த சத்ய விரத விமானம் கீழ் எங்கள் நாயகனே!
இனிதே வைகுந்த வல்லியின் துணையுடன் அருள்புரியும். (விண்ணில்)
சரணம்
அண்டமுடன் அனைத்தையுமே உண்டுமிழ்ந்தவனே!
எண்திசையுடன் எது அழிந்தாலும் அழியா சத்வ குணத்தோனே!
மண்ணவரும் மகிழ்வுறவே உத்தங்க முனி காணவே,
கண்ணில் கருணைப் பெருக்கெடுக்குதே தாமரைக் கண்ணிலே (விண்ணில்)