ராகம் – ராகமாலிகை தாளம் – ஆதி
செஞ்சுருட்டி
நீராருங்கடலுடுத்த உலகுக்குக் காவலனே!
திருமணிமாடக் கோயிலின் நாரணனே!
நரநாரணனாகியே குருவாகிச் சீடனாகிய
நந்தாவிளக்கே அளத்தற்கரியனே! ( நீராரும்)
நாதநாமக்ரியா
திருநாங்கூர் கருடசேவை பதினொரு உருவில்
தெய்வ மணக் காட்சி தரும் பெருமாளில் முதல்வனே.
கார்வண்ணனாய்த் தன்னை அண்டிவரும் அடியவர்க்குக்
கருணைமழை பொழியும் கருமேனிஅம்மானே. (நீராரும்)
புன்னாகவராளி
பிரம்மஹத்தி தோஷம் நீக்கிச் சிவனாருக்கு அருளிய
மணிமாடக்கோயிலின் மணவாளனே!.
ஐராவதம் இந்திரனின் சாபமும் தீரத்தவனே!.
வினையாவும் தீர்த்து எனையாளும பெருமானே! (நீராரும்)
சிந்துபைரவி
சீரே தரும் கதியில் நான் உன்னையும் சேருதற்கே
மணிமாடக் கோயிலுக்கு வந்து சேருவேன்.
அரங்கனே! நெடுமாலே! கார்வண்ணா! பத்ரிநாதா!
புண்டரீகவல்லியுடன் பிரணவ விமானம் கீழே (நீராரும்)