
ராகம் – லலிதா தாளம் – ஆதி
பல்லவி
நெஞ்சினில் நினைத்தாலே இனித்திடும் தேவனே!
தஞ்சை மாமணிக் கூட நீலமேகமே! (நெஞ்சினில்)
அனுபல்லவி
செஞ்சுடர் ஆழியானே! செங்கமல வல்லி நாதனே!.
தஞ்சை மாமணியாய் நின்ற காவல்தெய்வமே!. (நெஞ்சினில்)
சரணம் 1
தஞ்சகன் தண்டகன் தாரகன் மூவரின்
வஞ்சகம் அழிந்திட மூவராய் வந்தாய்.
தஞ்சகன் சரணடைய தஞ்சாவூர் பிறந்ததே.
அஞ்சிய தாருகனழிய மணிக்குன்றம் வந்ததே ((நெஞ்சினில்)
சுரணம்2
வெஞ்சின அரவம் தனில் துயில்கின்ற மாதவனே!.
அஞ்சிறைப் புள்ளும் ஊர்ந்திடும் மாலவனே!.
அஞ்சேலென்றெனை ஆட்கொள்ளும் தூயவனே!.
மஞ்சுசூழ் வெண்ணாற்றங்கரை வாழும் நாயகனே! (நெஞ்சினில் )