ராகம் – கமாஸ் தாளம் – ஆதி
பல்லவி
வெள்ளியங்குடியானே! கோலவில்லி ராமனே!.
பள்ளி கொண்டாய் அனந்தன்மேல் புஜங்கசயனனே! (வெள்ளி)
அனுபல்லவி
புள்ளரசன் கையில் சங்கு சக்கரம் கொடுத்தவனே!
கள்ளத்தனம் செய்த சுக்கிரன் பார்வை மீட்டுத் தந்தவனே! (வெள்ளி)
சரணம்
உள்ளங்கவர் மரகதவல்லியின் மணவாளனே!.
தாளால் உலகம் அளந்திட்ட திருவிக்கிரமனே!.
கள்ளூரும் பைந்துழாயில் சிருங்கார சுந்தரனுன்
தாள் பணிந்தனைத்து திவ்ய தேச பலன் பெறுவோமே. (வெள்ளி)