ராகம் – தன்யாசி தாளம் – ஆதி
பல்லவி
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் பதம் பணிந்தேன்.
பொற்றாமரையாள் கேள்வனே! கஜேந்திர வரதனே! (ஆற்றங்கரை)
அனுபல்லவி
பாற்கடல் நாயகனே கவித்தலத்தில் உறைபவனே!
ஆற்றலுடை அனந்தன் மேலே துயின்றருளும் கிருஷ்ணனே! (ஆற்றங்கரை)
சரணம்
கூற்றுவனாய் வந்த முதலையின் வாய் மீட்டு
ஆறாமத யானைக்கும் முதலைக்கும் மோட்சம் தந்து,
சிறிய திருவடியாம் அனுமனுக்குக் காட்சி தந்து,
கூற்றமும் கொடுவினையும் எனைச் சேராது காப்பவனே! (ஆற்றங்கரை)