ராகம் – பீம்ப்ளாஸ் தாளம் – மிஸ்ரசாபு
பல்லவி
உலகம் யாவையும் காத்து அருளும் லோகநாதனே சரணம் சரணம்
உலகநாயகி அரவிந்தவல்லி தாமோதரனே சரணம் சரணம் (உலகம்)
அனுபல்லவி
நீலவண்ணனே கட்டுண்டாயே யசோதை அன்பினிலே-முக்
காலமுணர்ந்த முனிக்காய்க் கட்டுண்டாய் கண்ணங்குடியினிலே (உலகம்)
சரணம்
தோலாவழக்கும் உறங்காப்புளியுடன் ஊறாக்கிணறும் காயாமரமும்
மாலவன்புகழ் சொல்லியே மங்கை மன்னன் பக்தியைக் காட்டுதே.
நீலகண்டனாய் மாறித் திருநீறணிந்து மாயம் செய்தவனே!
காலமெல்லாம் உனக்கு அடிமையாக வேண்டும் நாராயணனே! (உலகம்)