ராகம் – சஹானா தாளம் – ஆதி
பல்லவி
வையம் காத்த பெருமாளே! திருக்கூடலுர் உறைவோனே!
கையில் செங்கோல் ஏந்தி நிற்கும் ஜகத்ரக்ஷகனே! (வையம்)
அனுபல்லவி
தூய அன்பன் அம்பரீஷனுக்கபயம் அளித்தவனே!.
கையிலுள்ள ஆழியாலே அவனுயிரைக் காத்தவனே! (வையம்)
சரணம்
மாயவனே வராகமாய் நிலம் குடைந்து தேடியே,
தாயவளாம் பத்மாசனியைத் தாங்கி வந்த நாதனே!
உய்ய வந்தானே ! முனிவர் தேவரும் வணங்கி நிற்கும்
ஆயர் குலக் கண்ணனே ! என்னுளம் கவர்ந்தவனே! (வையம்)