ராகம் – ஹேமவதி தாளம் – ஆதி (இரட்டைக்களை)
பல்லவி
மூவடியால் உலகமனைத்தும் அளந்தவனே! ஒளிமலர் சேவடியே போற்றி!.
மாவலியை அடக்கியே வாமனனாய் விக்கிரமனாய் அண்டமாளும் காவலா போற்றி! (மூவடி)
அனுபல்லவி
இருவினையும் அகற்றியே விண்ணுலகம் சேரவே சீராம விண்ணகரம் சேர்வோம்.
திருவிக்கிரமனாய்த் தாடாளனையும் லோகநாயகியையும் சேர்த்துத் தொழுவோம். (மூவடி)
சரணம் (துரித காலம்)
அவதாரப் புருஷனாம் ஸ்ரீராமனுடன் சீதை அருள்கின்ற பாலிகாவனமே.
தவிட்டுத் தாடாளனாய்ப் பானையில் ஒளிந்த செங்கமாலின் பிரம்மபுரமே.
கவிபாடும் சம்பந்தர் திருமங்கை புலமையை ஏற்ற இடம் உத்தம க்ஷேத்திரம்.
புவிபடைக்கும் பிரமனை அடக்கி உரோமசமுனிக்கருளிய மாவலிக்ஷேஷத்திரம் (மூவடி)