ராகம் – ஸ்ரீரஞ்சனி தாளம் – ஆதி (திஸ்ரம்)
பல்லவி
கோவிந்த ராஜனை நிதம் நினை மனமே!
தேவாதிதேவனாம் சித்திரகூட நாதனை! (கோவிந்ததராஜனை)
அனுபல்லவி
கோவலனாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயனை.
அரவின்மேல் போகசயனன் நீலகண்டனின் நடனம் காணும் (கோவிந்தராஜனை)
சரணம்
தேவியாம் புண்டரீகவல்லியின் நாயகனை,
நால்வேதமும் மலிகின்ற கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரத்தில்,
தேவரும் வணங்கிடும் தெய்வப் புள் ஏறும் பெருமாளை
நாவாரப் பாடியே அனுதினமும் பணிந்தே (கோவிந்த ராஜனை)