|ராகம் – வலசி தாளம் -ஆதி
பல்லவி
அந்தகார இருள் நீங்க வேதம் மீட்டுக் காத்தவனே!
இந்தளூர் அதிபதியே! பரிமள ரங்க நாதனே! (அந்தகார)
அனுபல்லவி
சுகந்தவனநாயகி பரிமள ரங்கநாயகி
இந்தளூரில் வேதமணம் பரப்பி உந்தன் அருகிருக்க (அந்தகார)
சரணம்
சந்திரனின் சாபம் தீர்த்த இந்து புரியிலே
அந்தண் ஆலி மாலே கங்கை பாவம் தீர்த்தவனே!
நந்தாவிளக்கின் சுடரே காவிரிக்கு ஏற்றம் தரவே
வந்த மதுசூதனனே! உன்னடியே பணிந்தேனே. (அந்தகார)