ராகம் – ரேவதி தாளம் – ஆதி
பல்லவி
நாதனே! ஜகந்நாதனே! ஸ்ரீநிவாசனே! நாதநாதனே!
காதல் துணைவி செண்பகவல்லியுடன் செண்பகாரண்ய
வாசனே! (நாதனே).
அனுபல்லவி
தாதை உதவிய தரணிதன்னை நீத்துக் கானகம் சென்ற ராமனே!.
தாதை நந்தனின் சோகம் தீரவே கோகுலம் வந்த கண்ணனே! (நாதனே)
சரணம்
நிதம் பணியும் அடியவர் உள்ளம் பெருமான் வாழும் உறைவிடமே.
சதைதந்து சிபி புறாவுக்குயிர் கொடுத்து நாதன் அருளைப் பெற்றானே.
மாதவம் செய்த நந்தியின் பெயரால் நந்திபுரவிண்ணகரம் ஆனதே.
நாதன்கோயில் தலைவனைப் பணிந்தவர்க்கில்லை இருவினைப் பயனே. (நாதனே)