ராகம் – கரகரப்ரியா தாளம் – ஆதி
பல்லவி
பாதாரவிந்தம் பணிவோம் திருநறையூர் நம்பீ!
ஆதாரம் நீயே அன்றோ பேரானந்தம் தருவாய (பாதாரவிந்தம்)
அனுபல்லவி
மாதவம் செய் வஞ்சுளத்தை மணந்த ஸ்ரீநிவாசனே!
முதன்மை அவள் பெறவே நாச்சியார் கோவில் ஆனதே (பாதாரவிந்தம்)
சரணம் 1
பீதக ஆடையில் பரம குருவாய் நின்று
கோதில் திருமங்கைக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்தாய்.
பாதம் பதித்து இம்மூவுலகை அளந்தவனே.
கதியேதுன் அருளன்றி நிதியேது எமக்கே (பாதாரவிந்தம்)
சரணம் 2
ஸ்ரீதேவியைத் தேடிய திருமாலுக்குக் கருடன்
உதவியே கோயிலில் கல் கருடனாயமர்ந்தான்.
பத்துஅவதாரமும் நவக்கிரமும் சக்ராயுதத்தில்
பதிந்திருக்கும் சித்திக்ஷேத்திரம் திருநறையூரே. (பாதாரவிந்தம்திருநறையூர்