
ராகம் – ஹம்சத்வனி தாளம் – ஆதி
பல்லவி
பாலாழியில் பிறந்த திருமகளை மணம்புரிந்தே
ஆலிங்கனம் செய்த வயலாளி மணவாளா! (பாலாழி)
அனுபல்லவி
கலியன் எனும் கர்த்தம ப்ரஜாபதிக்கு உபதேசித்து
கலியுகத்தில் முக்தி தந்த ஸ்ரீநகரி வாசனே! (பாலாழி)
சரணம்
ஆலினிலை பாலகனே! ஆவினம் மேய்த்த கண்ணனே!
கோலவில்லெடுத்து வாலி இராவணனைக் கொன்றவனே!
நீலமேக ஸ்யாமளனே! அமுதவல்லி நாதனே!
ஆலிநகர், திருநகரிக்கதிபதி வேதராஜனே!. (பாலாழி)