
ராகம் – சௌராஷ்டிரம் தாளம் – ஆதி
பல்லவி
சரணமென்றடைந்தவர்க்கு வைகுந்தம் காட்டும் உன்
திருவடி பற்றினேன் சௌரிராஜனே! (சரணம்)
அனுபல்லவி
திருவெட்டெழுத்தின் மந்திரப் பலன் தரும்
வரம் தரும் பரஞ்சோதி கண்ணபுரத்தானே!(சரணம்
சரணம் 1
திருமுடியில் கேசம் வளர்த்து அடியவரைக் காத்தவனே!
பிரயோக சக்கரத்தால் கொடியவரை அழித்தவனே!
மராமரம் ஏழும் துளைத்த ராமச்சந்திரனே!
இரணியன் ஆகம் கீண்ட வீரநரசிம்மனே! (சரணம்)
சரணம் 2
கற்றார் பிறவியறுக்கும் பெருங்கடலே!
உற்றானாய் எனக்கு உயிராக நின்றவனே!
பிறவாமை அளிக்கும் வயலாளி அம்மானே!
பெற்றோர் கால் விலங்குகளை அறுத்தெறிந்த கண்ணனே! (சரணம்)