
ராகம் – புன்னாகவராளி தாளம் – ஆதி
பல்லவி
என்னப்பனல்லவா? என்தாயும் அல்லவா?
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் அல்லவா? (என்)
அனுபல்லவி
தன்னிகரில்லாத ஒப்பிலா அப்பன்-துளசி
வனமதில் கிடைத்த பூதேவியை மணந்தவனே! (என்)
சரணம்
தென்திருப்பதி எனும் பூலோக வைகுந்தம்.
வான்நின்றிழிந்து மண்ணில் அருள்கின்ற விண்ணகரம்.
முன்பின் வினையகற்றும் உப்பிலா சிரவண விரதம்.
மாம் ஏகம் சரணத்தின் திருமாலின் உருவம். (என்)