
ராகம் – பைரவி தாளம் – ஆதி(திஸ்ரம்)
பல்லவி
வல்வினை நீங்கிடும் கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாளை
அல்லும் பகலும் பவிநாதன் கமலவல்லி நாதனை நினைத்திடவே. (வல்வினை)
அனுபல்லவி
பொல்லாதவர்க்கும் மனமிரங்கி அருளும் சித்திக்ஷேத்திரமே.
அலைமகள் சிவனுடன் பிரமனின் கதைசொல்லும் திருமூர்த்தி க்ஷேத்திரமே. (வல்வினை)
சரணம்
மலைமகளின் நாதன் பிரம்மஹத்தி தோஷம் நீஙகப் பிச்சை ஏந்தினார்.
வலம்புரி ஆழியானைக் கருடனும் அனுமனும் இணைந்தே வணங்கி நின்றார்.
நிலவின் சாபமும் புனிதநதி பாவமும் நீக்கிய தலம் இதுவே..
புலனைந்தும் மேயும் பொறிஐந்தும் அடங்கி ஞானம் வளர்ந்திடுமே. (வல்வினை)