
ராகம் – ஹரிகாம்போதி தாளம் -ஆதி
பல்லவி
குடந்தை நகர் அதிபதியே! ஆராவமுதனே!.
கிடந்த வாறெழுந்தவனே! உத்தானசாயியே! (குடந்தை)
அனுபல்லவி
படங்கொள் நாகம்தனில் துயிலும் சாரங்க பாணியே!.
குடமுக்கில் இனிமை ஒளி வீசும் சார்ங்கராஜனே!(குடந்தை)
சரணம்
உடனுறை தேவியை அகலாது நெஞ்சில் சுமந்து,
படிதாண்டாபத்தினி கோமளவல்லியை மணந்தவனே!
குடமாடும் கூத்தனே! உலகமுண்ட வாயனே!
சுடராழியுடன் மகாமகக் குளக்கரை வாழ் கண்ணனே! (குடந்தை)