
ராகம் – யமுனாகல்யாணி தாளம் – ஆதி
பல்லவி
நாண்மதியப் பெருமாளே! வியோமஜோதியே!
கண்ணாரக் காணும் நாள் என்றோ நான் அறியேன் (நாண்)
அனுபல்லவி
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க நாண் மதியத்தில்
தண்மதியின் சாபம் நீக்கி அருள் புரிந்தவனே. (நாண்)
சரணம்
விண்ணில் விரிகின்ற வெஞ்சுடரே! குளiர்மதியே!
எண்சுடர் பெருமாளே! செங்கமல வல்லி நாதனே!.
வெண்சங்கம் இடத்தானே! உலகநாதனே!.
அணிஅரங்கனே! ஐம்பூதம் தன்னகத்தே உடையானே!.(நாண்)