
ராகம் – பூர்விகல்யாணி தாளம் – ஆதி
பல்லவி
சாரநாதனே! சாரநாயகி நாதனே!
திரு வைகுந்த நாதனுக்கு ஒப்பானவனே! (சார)
அனுபல்லவி
அருந்தவம் செய் காவிரியைப் பொன்னி ஆக்கியே
திருவரங்கன் அடிவருடும் கங்கையிலும் புனிதமாக்கும் (சார)
சரணம்
திருச்சேறை மண்ணெடுத்து வேதாகமம் காத்தவனே!
கருடவாகனம் தன்னில் தேவியர் ஐவர் சூழ
கரமதில் தாமரை மலரும் ஏந்தியே
மார்க்கண்டேய முனியைக் கருவறையில் ஏற்றவனே!. (சார)