
ராகம் – மாயாமாளவகௌள தாளம் – ஆதி
பல்லவி
கருமாமுகில் வண்ணனே! திருச்சிறுபுலியூர் வாழும்
அருமாகடல் அமுதனே!உன் கழலடி பணிந்தேனே (கருமாமுகில்)
அனுபல்லவி
கருடனிடமிருந்து ஆதி சேடனைக் காத்தருள் புரிந்தே
அரவணைமேல் அமர்ந்த கிருபா சமுத்திரப் பெருமாளே! (கருமாமுகில்)
சரணம்
திருவரங்கனைப் போலவே அரிதுயிலும் கொண்டவனே!
கருணையில் நீரில் பால சல சயனம் ஏற்றவனே!
திருமாமகளை மணந்த கார்கடல் அழகன் நீயே.
பேரானந்தம் அளித்து வினை நீக்கும் அமரர்க்கதிபதியே! (கருமாமமுகில்)