ராகம்- மலயமாருதம் தாளம் – ஆதி
பல்லவி
ஆயிரம் நாவுடை ஆதிசேஷனில் அமர்ந்து
மாயம்செய்யும் திருமாலின் திருப்பாற்கடலே (ஆயிரம்))
அனுபல்லவி
பையரவில் பரமன் பள்ளி கொள்ளும் வேளையிலே
ஓயாது அலைக்கரத்தால் பாதம் வருடும் பாற்கடலே. (ஆயிரம்)
சரணம் 1
காயகல்பமாம் அமுதமும் காமதேனுவும்
நேயமுடன் ஐராவதம் உலகுக்களித்த வள்ளலே.
பையத்துயின்ற பரமனுடன் உனையும் தொழுதால்
தீயினில் தூசாகும் இடர் யாவும். வரும் சுகமே (ஆயிரம்.)
சரணம் 2
ஓயாப்பிறவிக் கடல், தொடரும் வினைக் கடல்.
காயமே பொய்க்கடல்,உன்கருணைப் பெருங்கடல்
நேயமுடன் எமது மனக்கடல் தொழுதேத்த
பாய்ந்தே ஆராவமுதக்கடலாய் அருள்வாயே. (ஆயிரம்)