ராகம் – சுநாதவிநோதினி தாளம் – ஆதி
பல்லவி
துவாரகா தீசனே! எங்கள் கல்யாண நாரணனே!
தேவர்கள் அதிபதியே! லஷ்மி ருக்மணி நாயகனே! (துவாரகா)
அனுபல்லவி
கோவலனாய்க் கன்றுமேய்த்துக் குழலூதி நின்றவனே!
யாவும் மறந்த கோபியரின் மனம்கவர் கள்வனே! (துவாரகா)
சரணம்
தேவகி வயிற்றில் பிறந்து யசோதை அணைப்பினில் வளர்ந்தவனே!
காவலைக் கடந்து கம்சனை வதம்செய்த வடமதுரை மன்னனே!
மாவலி சிரம்தனில் பதம்வைத்து மூவுலகினையும் அளந்தவனே!
த்வாபர யுகத்தின் அவதாரமே! பகவத் கீதையின் நாயகனே! (துவாரகா)