ராகம் – ஹிந்தோளம் தாளம் – ஆதி
பல்லவி
அடைவாய் நெஞ்சே அடைவாயே
திருப்பிரிதி சென்று அடைவாயே.
மடைதிறந்திடும் வெள்ளமாய் வரும்
மானஸரோவர் கரைசேர்வாயே. (அடைவாய்)
அனுபல்லவி
கிடந்த நம்பியும் இமயமலைமேல் பரமபுருஷனாய் நிற்கின்றான்.
குடமாடும் கூத்தன் பரிமளவல்லியின் நாயகனாய்….
அருள் புரிகின்றான் (அடைவாய்)
சரணம்
அடிக்கமலம் பிடித்த சிறுவனுக்காக ஓடிஆடியே தவித்தவனே!
இடம்பெயர்ந்து தூண்பிளந்து வந்து நரசிங்கமாகவே ஆனவனே!
முடிதாழ்த்தி வணங்கும் வானவரின் தலைவன் வாழும் ஜோஷிமட் சேர்வாயே.
அடியார்க்கு ஞானம் தரும் மூர்த்தியினைநீயும் தொழுதிடவே வருவாயே. (அடைவாய்)