ராகம் – திலங் தாளம் – மிஸ்ரசாபு
பல்லவி
நீலமேகப் புருடோத்தமன் வாழுகின்ற திருநகர்
சலசலக்கும் கங்கையாறு ஓடும் கண்டங்கடிப் பதியே. (நீலமேக)
அனுபல்லவி
தலையில் சிவன் அணியும் கொன்றையும், மாலவனின் திருத்துழாயும்
கலந்து கங்கை ஆற்றின் புனிதம் பெற்ற தேவப்ரயாகையே (நீலமேக)
சரணம்
கலைமகளின் பிரமனுக்கு வேள்விப்பயனும் தந்த இடமே.
வில்லும்வாளும் ஆழிசங்கும் உலக்கைப் படையும் காக்குதே.
நிலைகுலைக்கும் இருவினைப்பயன் அறுக்கும் திவ்ய தேசமே.
ஆலிலையில் துயில் கண்ணனே விரும்பியமர்ந்த திருப்பதியே (நீலமேக)