ராகம் – தேஷ் தாளம் – ஆதி (இரட்டைக்கிளை)
பல்லவி
ஞானவிளக்கேந்தியே ஞாலஇருள்நீங்கவே வாவென்றழைக்கின்றான்
தானே குருவாய் தானே சீடனாய் மோனத்தவம் புரிகின்றான் (ஞான)
அனுபல்லவி
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரியில் உறைகின்றான்
பனிமலைச் சிகரத்தில் அரவிந்தவல்லியுடன் ஆட்சி புரிகின்றான். (ஞான)
சரணம்
ஊனமும் முதுமையில் நமைஅணுகாமுன் வதரிசென்றே வருவோம்.
ஊனமே ஆனாலும் போய்த்தொழுவோம் நரநாரணனைக் காண்போம்.
எண்எட்டெழுத்து த்வயகுரு தேசிகன் இராமானுஜரைக் காண்போம்.
தண்துழாய் மாலை நாரணன் அருளால் பேரின்ப நிலை அடைவோம் (ஞான)