
ராகமாலிகை தாளம் – ஆதி
ராகம் – சுத்தசாவேரி
மண்ணில் ஒளிருதே விண்ணரங்கம்
மாந்தர் போற்றிடும் பொன்னரங்கம்.
கண்ணில் தெரியுதே ஒரு சுவர்க்கம்
காவிரிபாயும் திருவரங்கம்.
ஹிந்தோளம்
விண்ணளாவிய கோபுரம்
வெண்முகிலில்ஆடும் பொன்கலசம்.
வண்ண மாடத்து அரங்கன் நாமம்
வாவென்றழைக்கும் ஸ்ரீரங்கம்
சிந்து பைரவி
வண்டார் பொழில் சூழெழில் அரங்கம்
அண்டர்கோன் அமரும் பூவரங்கம்.
தண்துழாய் மார்பனைத் தொழுது பாடி.
அரையர் ஆடும் அணியரங்கம்
பாகேஸ்ரீ
அண்ணல் ராமனின் கம்பன் காவியம்
அரங்கேற்றப் புகழ் கவியரங்கம்.
நான்கு வேதமும் திவ்யப் பிரபந்தமும்,
நாளும் ஓதிடும் அருட்சுரங்கம்.
சுருட்டி
கண்மூடி நாகம் தனில் துயிலும்
கண்ணனைப் பாடிய கோதையும்,
வண்ணப் பூமாலை சூடியும் சூட்டியும்
அரங்கனை மணந்த மணவரங்கம்.
ரேவதி.
விண்ணிலே மோட்சம் தேடும் அன்பர்க்கு,
எண்ணிலா ஊழித்தவம செய்தாற்போல்,
பண்ணிய பாவம் அறவே தொலைக்கும்.
பூலோக வைகுந்தம் தென்னரங்கம்
காவிரி பாயும் புனலரங்கம் வாவென்றழைக்கும்
ஸ்ரீரங்கம்,ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம்.