ஸ்ரீமத் நாராயணனே பரம்பொருள். காரணமும் காரியமுமாய்
நாதனாய் எழுந்தருளியுள்ளான். அவனை இவ்வுடலோடு
சேவிப்பது இயலாது.
நம்மால் காண முடியாது.
கலியுகத்தில் எளியவனாய், பரமபதநாதன் அர்ச்சாவதார மூர்த்தியாய்க் கோயில்களால் எழுந்தருளிச் சேவை சாதிக்கிரான்.
சேவிக்கும் பாக்கியம், நம் அனைவருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அவனருளால்தான் அவன் பாதம் பணியும் பேறு
கிடைக்கும்.
திவ்ய தேசங்களைத் தரிசிக்க முடியாதவர்கள், ஆழ்வார்களின் பாசுரங்களைப் படித்து இன்புறலாம். பரந்தாமனின் திவ்ய மங்கள ஸ்வரூபங்களை, அத்திவ்ய தேசங்களின் வாயிலாக அறிந்து, இறையருளைப் பெறலாம்.
விபவங்களால், மத்ஸ்யம், கூர்மம், வராஹும், ந்ருஸிம்ஹும், வாமனம், பரசுராமம், ராமம், பலராமம், கிருஷ்ணம், கலியுக முடிவில் கல்கி ஆகிய பத்து அவதாரங்களையும் பார்க்க நாம் அக்காலத்தே பிறந்திருக்கவில்லை.
ஆழ்வார்களின் பாசுரங்களைத் திருமதி இந்து ரங்கனினிடம்
கற்ற போது, அடியேன் அறிவுக்கு எட்டியபடி, வைகுந்த நாதனின்
பெருமையைப் பாடல்களால் காணிக்கை செலுத்த எண்ணினேன்.
எங்கள் குலதெய்வமும், கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில்
அருள்பரியும் கோமள வல்லித் தாயார் கருணையினால் அந்த
கனவு நனவாகியது.
எங்கள் ஆச்சாரியரும், பரவக்கோட்டை ஸ்ரீமத்
ஆண்டவன் கோபாலதேசிக மஹாதேசிகன் அவர்களை நேரில்
சந்தித்த போது அடியேன் ஆசையைத் தெரிவித்து அவர் ஆசி
பெற நினைத்துத் தயங்கினேன். ஆனாலும் ஆஸ்ரமத்தின்
வாயிலில் நின்று மௌனமாக அவருக்குத் தெரிவித்தேன்.
அவ்வேண்டு கோளுக்குச் செவிசாய்த்து, திவ்யதேசப் பாடல்களை
எழுதப் பெருங்கருணையுடன் அருள் செய்தது, அவரது
கருணையையும் ஸெளலப்யத்தையும் காட்டுகிறது. இறுதியில்
23 பாடல்களை எழுதி முடிக்க இயலாத நிலையில் மீண்டும்
அவரிடம் சரண் புகுந்தேன். என் நலம் விரும்பியான திருமதி
மீனலோசனியின் யோசனைப்படி, என் எழுது கோலை ஆச்சாரியன்
படத்தின் முன் வைத்து வேண்டினேன். அப்பெருங்கருணைக்கடல்
23 பாடல்களையும் முடித்து வைத்ததற்கு அடியேன் செய்தபாக்கியம்
என்ன ? அவரை அடிக்கடி பார்த்துப் பேசியதில்லை.
நெருங்கிய தொடர்பும் இல்லை. அடியேனையும் அவரது கடைக்
கண் பார்வையில் கடாக்ஷiத்து விட்டார். 108 திவ்ய தேசப் பாடல்
தொகுப்பு நூலை அவருக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.
ஸ்ரீமத் வேத மார்க்க ப்ரதிஷ்டாபனாச்சார்ய உபய
வேதாந்தாச்சார்யராய், ஸ்ரீதேசிக தர்சன துரந்தரராய்,
ஸ்ரீ பௌண்டரீகபுரம் ஸ்வாமி ஸ்ரீமத்ஆண்டவன் ஆஸ்ரமத்தின்
பீடாதிபதியாய் எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் மஹா கோபால
மஹா தேசிகன் (ஸ்ரீ பறவாக்கோட்டை ஸ்ரீமதாண்டவன்,
இந்நூல் வெளிவரும் நேரத்தில் 12.11.2011 அன்று திருநாடு
அலங்கரித்தது, அனைவருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.
அன்னாரின் நினைவு அஞ்சலியாக நாராயணனைத் தேடி என்ற
இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்
இந்நூலை எழுதும் ஆவல், எனது மனதில் நீண்ட
நாட்களாகவே இருந்த போதிலும், அது வேரூன்றி வேகமாகவளர
ஆரம்பித்தது, நான் எனது கணவருடன் சோழநாடு திவ்ய
யாத்திரையைத் தொடங்கிய பிறகுதான் யாத்திரையின்
இறுதியில் குருவருளும் திருவருளும் கிடைத்துப் பாடல்களை
எழுத ஆரம்பித்தேன்.
பாடல்கள் எழுத ஆரம்பித்ததுதான் என்
தனி முயற்சியே தவிர முடிக்கும் பொழுது குடும்ப அங்கத்தினர்
அனைவரும் பங்கேற்ற கூட்டு முயற்சியாகவே ஆகிவிட்டது.
தொடக்கத்திலிருந்து இறுதிவரை என்கணவர் திரு சந்தானம்
அவர்கள் அளித்த ஊக்கமும் உதவியும் எழுத்துக்களுக்கு
அப்பாற்பட்டவை.
இந்நூல் நல்ல படைப்பாக அமையவேண்டுமென்று
அயராது உழைத்த உள்ளங்களுக்கு என் மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமால் பெருமை
கூறும் புத்தகங்களைக் கொடுத்துதவிய எனது தமையனார்.
திரு ரங்கசாமி, எனது மகன் திரு பாலாஜி, மருமகள் திருமதி.
சுஜாதா பாலாஜி, ஒவ்வொரு பாடலுக்கும் இசை அமைப்பதில்
உறுதுணையாய் நின்ற எனது சகோதரிகள். திருமதி. கனகா,
அம்புஜா, கமலா, பாடல்களை ஒன்றிணைத்து நூல் வடிவில்
கொணர்ந்த எனது மற்றுமொரு சகோதரி திருமதி விஜயா,
அவள் கணவர் திரு கோபால், அவர்களின் புத்திரர்கள்
திரு ஸ்ரீநிவாச ராகவன், திரு. நரஸிம்ம ராகவன் ஆகியோர்கள்
என் நன்றிக்குரியவர்கள்.
இதில் திரு நரஸிம்மராகவனின் பங்கு
சொற்களுக்கு அப்பாற்பட்டது. இந்நூலின் வெளியீட்டினை
எதிர்பார்த்து இருக்கும் எனது பேரன் அபிஷேக், பேத்தி சுவேதா
இருவருடைய உற்சாகம் என்னைப் பாடல் எழுதி முடிப்பதற்கு
மேலும் தூண்டியது.
என்னுடைய இசைப்பயணத்தில் தொடர்ந்து
வரும் திருமதி விஜயலக்ஷfமி கிருஷ்ணகுமாரும் நன்றிப் பட்டியலில்
அடங்குவாள்.
அலைகள் ஆயிரமாயினும். எண்ணஅலைகளோ பல்லாயிரம்.
அவை சொல் வடிவம் பெற்றுப் படிப்போர் மனதைக் கவரும்
வண்ணம் சிறந்த புத்தகமாக வெளி வருவதற்குதவிய
பதிப்பகத்தாருக்கு எனது நன்றிகள்.
எனது அருமையான கணவரைப் பெற்று எனக்கு உற்ற
வாழ்க்கைத் துணையாக்கிய எனது கணவரின் மறைந்த பெற்E$ர்
திருமதி ருக்மணி, திரு.சுந்தரராஜன், எனது காலம் சென்ற
பெற்E$ர் திருமதி ஜானகி, திரு. ஜகந்நாதன் அவர்களுக்கும்,
ஒளியாய்ப் பிறந்து, ஒலியாய் வளர்ந்து, ஐந்து வயதிலேயே பூலோக
வைகுந்த நாதனாகிய அரங்கனை அனவரதமும் தியானித்து,
அவன் திருவடி நீழலை அடைந்து, வாழ்க்கையின் அநித்தியத்தை
உணர்த்தி எங்களுக்கு ஞானமளித்த எங்கள் மகள் வித்யாவுக்கும்
இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்.
இந்நூலில் பிழையேதும் இருந்தால் அனைவரும் மன்னித்து
இப்பணி தொடர அடியேனை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.
திருமதி பத்மாசந்தானம் எம். ஏ